Menu
 

digital digital Author
Title: கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660 காலிப்பணியிடங்களுக்கு...........
Author: digital
Rating 5 of 5 Des:
TNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ண...

TNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான அலகு ஒதுக்கீடு 02.09.2015 முதல் 11.09.2015 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14-ஆம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 14.06.2014 அன்று நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் 15.12.2014 அன்று வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660
காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான அலகு ஒதுக்கீடு 02.09.2015 முதல் 11.09.2015 வரை (காலை 10.00 மணியிலிருந்து சான்றிதழ் சரிபார்ப்பும்/ காலை 08.30 மணியிலிருந்து கலந்தாய்வும்) பிரேசர் பாலச்சாலை, வ.உ.சி நகர் (பிராட்வே பேருந்து நிலையம் அருகில்), சென்னை-3-ல் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலமாக தனியாக அனுப்பப்பட்டுவிட்டது. நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Post a Comment

 
Top